சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கொழும்பில் திடீர் சந்திப்பு
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் மிகவும் இரகசியமான முறையில் இடம் பெற்ற போதும் சில ஊடகஙகள் இச் சந்திப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டதால் வேதாந்தி தரப்பு குழம்பிப் போய்யுள்ளது
இச் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் நிலவரம் தொடர்பாகவும ஆராயப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது