ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு ஆரம்பம் முதல் விசாரணை நடத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 15 பேர் அல்ல. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களேயாகும்.
உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யார் என்பதனை நாட்டு மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்த உள்ளமை குறித்து பிரசன்ன ரணதுங்கவிடம் கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.