News Update :

Sunday, June 25, 2017

TamilLetter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பயம் வெளிப்பட்டது



தம்மை யுத்தக்குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தவே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகல் – கோக்கரெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவரை அழித்து தம்மால் நாட்டிற்கு சுதந்திரம் கொண்டுவரப்பட்டது. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
தம்மையும், தம்முடன் இருப்போரையும் சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-