பாகிஸ்தான் இராணுவம் மஹிந்தவுக்கு அழைப்பு
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறப்புரையொன்றை நிகழ்த்துவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
“தேசிய பாதுகாப்பும் யுத்தமும்” எனும் கருப்பொருளில் அப்பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் உரையாற்றுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.