News Update :

Tuesday, June 27, 2017

TamilLetter

தைக்கா நகர் எவர் டொப் கழகம் நியுஸ்டார் அணியை வீழ்த்தி சம்பினாக தெரிவு

தைக்கா நகர் எவர் டொப் கழகம் நியுஸ்டார் அணியை வீழ்த்தி  சம்பினாக தெரிவு








அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையில் அட்டாளைச்சேனை நியுஸ்டார் கழகம் ஏற்பாடு செய்த மர்ஹூம் டாக்டர்   எம்.பி.எம் இஸ்மாயில்  ஞாபகார்த்த   உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதியாட்டம் அட்டாளைச்சேனை கட்ற்கரை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 கழகத்தின் தலைவர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்   நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிமின் இணைப்பாளர் தமீம் ஆப்தீன்,அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் என்.எல்.அஸ்மத்,வைத்திய கலாநிதி டாக்டர் நக்பர்.முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் அன்வர் நௌஷாத்,லீக்கின் பொருலாளர் ஹம்ஸா சனுாஸ் இணைப்பாளர் சுபியான் உட்பட பல பிரமுகர்களும்   கலந்து கொண்டனர்.

போட்டியின் முதலாவது கோலை 21வது நிமிடத்தில் எவர் டொப் அணியின் வீரா் ஹறுான் உட்புகுத்த 26வது நிமிடத்தில் நியுஸ்டார் அணி வீரா் அர்ஸாத் கோலைப் போட்டு அணியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் போட்டதால் போட்டி சமநிலையில் மடிவடைந்தது இதன் காரணமாக வெற்றியை தீர்மானிக்கும் பொருட்டு ஐந்து தண்டனை உதைகள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டன.

இதில் எவர் டொப் அணி 5க்கு மூன்று என்ற கோல் கணக்கில் வெற்றியிட்டியது

சிறந்த கோல் காப்பாளராக சியானும் சிறந்த முன்கள வீரராக நிகாசும் தெரிவு செய்யப்பட்டனர்.








TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-