News Update :

Tuesday, June 13, 2017

TamilLetter

வடகொரியாவில் நடக்கும் அவலம்: ஒரு சிறுமியின் கண்ணீர் குரல்

வடகொரியாவில் நடக்கும் அவலம்: ஒரு சிறுமியின் கண்ணீர் குரல்


வட கொரியா அதிபர் ஜிம் ஜாங்கின் சர்வாதிகார ஆட்சியால் அந்நாட்டு மக்கள் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு என்று தனிக்கட்டுப்பாடுகள் உள்ளன என அந்நாட்டில் இருந்து தப்பித்து வந்த 14 வயது சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய 14 வயது சிறுமி, வடகொரியாவில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் காதலிக்க கூடாது.
அந்நாட்டில் காதல் தொடர்பான புத்தகங்கள், பாடல்கள் எதுவும் கிடையாது, அங்கு இணையதளம் கிடையாது. அந்நாட்டுக்கு என்று ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டும் வைத்திருப்பார்கள்.
அங்கு படிக்கும் மாணவிகள் பாடல்களை பாடுவதற்கு கூட சுதந்திரம் கிடையாது, அப்படி ஏதாவது ரோமியோ ஜூலியட்டும் தென்பட்டால் அவர்கள் கிம் ஜாங்கின் ஆதரவாளர்களால் எச்சரிக்கப்படுவார்கள்.
வடகொரியாவில் மனிதாபிமானம், சுதந்திரம் ஆகிய இரண்டும் கிடையாது. எனக்கு 9 வயது இருக்கும்போது எனது தோழியின் தாய் தூக்கிலிடப்பட்டார், அவர் செய்த ஒரே தவறு ஹாலிவுட் படம் பார்த்ததுதான்.
வட கொரியாவில் இருந்து தப்பித்து அகதியாக சீனாவிற்கு சென்ற எனது தந்தை அங்கு உயிரிழந்தார், நானும் எனது அம்மாவும் வடகொரியாவில் இருந்து சீனாவிற்கு தப்பித்து வருகையில் இடைத்தரகர்கள் சிலர் என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.
ஆனால், அதிலிருந்து என்னை காப்பாற்ற எனது தாய் முயற்சித்ததில், எனது தாய் கற்பழிக்கப்பட்டார். வட கொரியாவை சேர்ந்த 300,000 பேர் அகதிகளாக சீனாவில் உள்ளனர், அதில் 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு நடக்கும் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்
சிறு குழந்தைகள் 200 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றனர். சீனாவில் இருந்து நாங்கள் வடகொரியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு நாங்கள் மனிதர்களாக வாழவே விரும்புகிறோம்.
வட கொரியாவிற்கு எந்த வழியில் உதவி செய்ய வேண்டும் என சில பேர் என்னிடம் கேட்டுள்ளார்கள், இதற்கு 3 வழிகள் உள்ளன, கல்வித்துறையில் சாதித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,
வட கொரியா அகதிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், வட கொரிய அகதிகள் நாடு திரும்புவதை சீனா அனுமதிக்க கூடாது.
வட கொரியா குறித்து நான் மட்டும் குரல் கொடுத்தால் போதாது, என்னைப்போன்று பலரும் குரல் கொடுப்பதற்கு முன்வரவேண்டும், அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-