News Update :

Sunday, June 25, 2017

TamilLetter

ரஜினியுடன் அஜித்தும் விஜய்யும் சேர்ந்தால்..! - எஸ்.வி.சேகர்



தமிழகத்தின் தற்போதய அரசியல் சூழ்நிலையில் ரஜினியுடன் அஜித்தும் விஜய்யும் கை கோர்த்தால் , தமிழக அரசியல் களத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக ரஜினி உருவெடுப்பார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் பிறந்த நாளின் போது, எஸ்.வி சேகர், வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி இருந்தார். இந்நிலையில் அஜீத் மற்றும் விஜய் இவர்களின் ஆதரவுடன் ரஜினி களம் புகுந்தால், அரசியலை பிழைப்பாக நடத்துபவர்களில் சிலர் ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என கூறும் கருத்துக்களை எல்லாம் புறம் தள்ளி , தமிழக அரசியல் ஒரு மாபெரும் சக்தியாக ரஜினி உருவெடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்ல இவர்கள் யார், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போட்டி இடலாம், வெற்றி பெற்றால் முதல்வராகவும் அமரலாம் அதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

தற்போது இவர் கூறிய கருத்து தமிழகத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-