அட்டாளைச்சேனையில் ஆள்பிடிக்கும் பஷீர் சேகு தாவுத்
எம்.முர்ஷீத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவுத் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான தீவீர செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக முக்கிய இளைஞர்களை குறிவைத்து சந்தித்து வருவதுடன் எதிர்வருகின்ற தேர்தல்களில் இளைஞர்களையும் பிரபலம் பெற்றவர்களையும் களமிறக்குவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதன்படி நேற்றிரவு அட்டாளைச்சேனையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பஹத்.ஏ.மஜீத் அவர்களின் இல்லத்திற்கு சென்ற பஷீர் சேகு தாவுத் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில்் தமது கட்சி சார்பாக போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பஹத் தரப்பிலிருந்து எந்தவித உடனடி பதிலும் வழங்கப்படவில்லை என அறிய முடிகிறது.