News Update :

Friday, June 9, 2017

TamilLetter

மாலத்தீவும் கட்டாருக்கான துாதரக உறவை முறித்துக் கொண்டது

மாலத்தீவும் கட்டாருக்கான துாதரக உறவை முறித்துக் கொண்டது
வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏழாவது நாடாக மாலத்தீவு இணைந்துள்ளது
கத்தாருக்கு எதிரான முடிவை மாலத்தீவு எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது. கத்தாருடனான தூதரக உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கத்தார் மற்றும் அந்த பிராந்தியத்தில் முக்கிய நாடாக விளங்கும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை சரி சமமாக வைத்துக் கொள்ள மாலத்தீவு விரும்புகிறது. சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகங்களை போல அல்லாமல் கத்தார் விமானங்களுக்கான தனது வான்பரப்பை மாலத்தீவு மூடவில்லை. மேலும் கத்தார் மக்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிடவும் இல்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-