News Update :

Monday, June 5, 2017

TamilLetter

அன்ஸிலுக்கு மீண்டும் சவால் விடுத்தார் - சுகாதார அமைச்சர் நஸீர்

அன்ஸிலுக்கு மீண்டும் சவால் விடுத்தார் - சுகாதார அமைச்சர் நஸீர் 




அட்டாளைச்சேனையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் பணம் பெற்றுக் கொண்டே தலைவரை விமர்சிக்கிறார் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அட்டாளைச்சேனை கடற்கரை விடுதியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட   கட்சியின் போராளி ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு  பதிலளிக்கும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்

முன்னாள் தவிசாளர் அன்ஸில் எமது கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமைப் பற்றி பல மோசமான விடயங்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றார்.இதற்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் அன்ஸிலின் கருத்துக்கு எதிராக எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை இதனால் உண்மையான கட்சிப் போராளிகள் எதை நம்புவது என்று வாய்மூடி மௌனமாக இருந்து வருகிறோம் என்றார்.

இதற்கு பதிலளித்த மாகாண அமைச்சர் நஸீர் அன்ஸில் பணம் பெற்றுக் கொண்டு இப்படி பேசுகிறார்.அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அத்தோடு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் முடியுமென்றால் அட்டாளைச்சேனையில் ஒரு கூட்டத்தை நடாத்திக் காட்டட்டும் என சவால் விடுத்தார்.

இந்த சம்பவத்தின் போது முன்னாள் தவிசாளர் அன்ஸிலின் வாப்பாவின் சகோதரா் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.





TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-