( ஜி.முஹம்மட் றின்ஸாத் )
அல்- மாஸ் விளையாட்டு கழகத்தின் நான்காவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக கழகத்தினால் இம்முறை NS foundation இன் அனுசரனையுடன் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் இப்தார் நிகழ்வானது சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் MSS. அமீர் அலி கலந்துகொண்டு சிறப்பித்தார்
மேலும் சாய்ந்தமருது பல நோக்கு கூட்டறவு சங்கத்தின் தலைவர் மற்றும் NS Foundation அமைப்பின் தலைவர் அதேபோன்று அல்- மாஸ் விளையாட்டு கழகத்தின் செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், கழக வீரர்கள், இளைஞர் கழக அங்கத்தவர்கள் மகளிர் அமைப்பின் அங்கத்தவர்கள் என மேலும் பல உயர்பீட உறுப்பினர்களும் கலந்து அல்- மாஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வை சிறப்பித்தனர்.
J.Mohamed Rinsath
Journalist
183 i/8, kariyapper road ,
sainthamaruthu-02