News Update :

Tuesday, June 27, 2017

TamilLetter

தவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்



தனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு நாம் ஆளாக்கப்படுவோம்.இதன் மூலம் நமது பிரதிநிதியல்ல நமது சமூகமுகமே தலைகுணிந்தே நிற்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர நேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் யானையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது தனிப்பட்ட ரீதியில் உதவித் தொகைகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் போராட்ட களத்தில் நின்ற உயிர்களை பாதுகாப்பதற்காக எனது உயிரை பணயம் வைத்து வேலை செய்தேன்.நான் அன்று பலரால் ஏமாற்றப்பட்டேன்.அம்பாரை மாவட்டத்தில் தமிழர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் எந்தவித அரசியல் அறிவற்றவர்களாக காணப்படுவது வேதனையளிக்கின்றது வறுமை நிலைக்குள் நமது மக்கள் அகப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.இதை தீர்ப்பதற்கு இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களைக் கூட நேரில் வந்து சந்திக்க முடியாதவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர்.தேர்தல் என்று ஒன்று வந்தால் மாத்திரம் இவர்களின் வீரம் வெளிப்படும்.

ஊடகங்கள் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை விவாதிப்பதற்கு அரசியல் பிரதிநிதிகளை அழைப்பதுணடு ஆனால் எப்படியானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அண்மையில் சக்தி ரீவி மின்னல் நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் தவமும் நமது கட்சியைச சார்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டனர் இதில் முஸ்லிம் காங்கிரஸ் சரியான நபரை அனுப்பியிருந்தது அந்த சமூகத்தின் சார்பான தவத்தின் குரல் நமது சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.அதன் அருகில் இருந்த நமது பிரதிநிதி வாய்மூடி மௌனமாக இருந்தார்.இதற்கு என்ன காரணம் சரியான தெளிவில்லாத அரசியல் ஞானமில்லாத அரசியல்வாதிகளை நாம் வாக்களித்து மாகாண சபைக்கு அனுப்பியதே இதற்கு காரணம் .

எதிர்வரும் காலமாவது தமிழ் மக்களின் விடிவுக்காக அது அமையட்டும் என்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-