News Update :

Wednesday, June 14, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் மறக்க முடியாத இப்தார் மீண்டும் அக்கரைப்பற்றில்

முஸ்லிம் காங்கிரஸின் மறக்க முடியாத இப்தார் மீண்டும் அக்கரைப்பற்றில் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறக்க முடியாத இப்தார் நிகழ்வுகளாக அக்கரைப்பற்றில் நடைபெற்ற வன்முறை கலந்த இப்தார் நிகழ்வு காணப்படும்.
கடந்த காலங்களில் அக்கரைப்பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்து கட்சியின் முக்கியஸ்தர்களை அழைப்பது வழமை.ஆனால் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதிகாரத்தில் இருக்கும் போது இளைஞர்களை துாண்டிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது அதாஉல்லாவின் வழமை.
இப்படியிருக்கும் நிலையில் அக்கரைப்பற்றின் தவிசாளராக இருந்த ஏ.எல்.தவம்.முஸ்லிம் காங்கிரசில் இணைந்த போது அதாஉல்லாவால் முஸ்லிம் காங்கிரஸின் இப்தார் நிகழ்வுகளை தடுக்க அல்லது குழப்ப முடியாமல் போய் தோல்வி கண்டார்.
அந்த வகையில் இம்முறை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸின் இப்தார் நிகழ்வு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி நடைபெரும் இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட்,மத்திய சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசீம்,விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
அத்தோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,முன்னாள் பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட கட்சியின் போராளிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்...

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-