News Update :

Thursday, June 29, 2017

TamilLetter

முஸ்லிம்கள் மீது கவலை கொள்ளும் நாமல் ராஜ­பக்ஸ

முஸ்லிம்கள் மீது கவலை கொள்ளும் நாமல் ராஜ­பக்ஸ



கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்­கும் சிங்­கள மக்­க­ளுக்­கும் இடை­யில் வேற்­று­மையை உரு­வாக்கி– கிழக்கு முஸ்­லிம் களை வடக்­கு-­–கி­ழக்கு தமி­ழர்­க­ளு­டன் ஒற்­று­மைப்­ப­டுத்தி வடக்­கு-­கி­ழக்கை இணைப்­ப­தற்கு இந்த அரசு முயற்சி செய்­கி­றது. அதற்­கா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தம் தூண்­டப்­பட்­டுள்ளது.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ஸ தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த நாட்­டில் பொது பல­சேனா தேரர்­கள் மாத்­தி­ர­மன்றி யாராக இருந்­தா­லும் குற்­றம் செய்­தி­ருந்­தால் கைது செய்ய முடி­யும்.நாங்­கள் இன­வா­தத்தை முழு­மை­யாக எதிர்க்­கின்­றோம். நாங்­கள் தேசி­ய­வா­தி­கள்; இன­வா­தி­கள் அல்­லர்.

பெரும்­பான்மை இனத்தை தாழ்த்­திச் சிறு­பான்மை இனங்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்த முடி­யாது. அவ்­வாறு செய்­தால் எந்த இன­மும் நிம்­ம­தி­யாக இருக்­காது.தெற்­கில் பள்­ளி­வா­சல்­கள் தாக்­கப்­ப­டு­கின்­றன.

கிழக்­கில் பௌத்த விகா­ரை­கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. மகிந்த காலத்­தில் இவ்­வா­றான சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன. அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­த­போது அதை எதிர்த்­த­வர்­கள் இந்த அர­சில்­தான் உள்­ள­னர். அர­சில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தார்­கள்.

அழுத்­க­ம­வில் அன்று பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் கட்­ட­டங்­களை பூர­ண­மா­கப் புன­ர­மைக்க முடிந்­தது. ஆனால் அந்த மக்­க­ளின் உள்­ளங்­களை புன­ர­மைக்க முடி­ய­வில்லை; அந்த இத­யங்­களை வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை. அளுத்­கம சம்­ப­வம் தொடர்­பில் விரி­வான விசா­ரணை நடத்­து­வ­தாக இந்த அரசு கூறி­யது. ஆட்­சிக்கு வந்­த­தும் மறந்­து­விட்­டது.

கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்­கும் சிங்­கள மக்­க­ளுக்­கும் இடை­யில் வேற்­று­மையை உரு­வாக்கி கிழக்கு முஸ்­லிம்­களை வடக்­கு-­கி­ழக்கு தமி­ழர்­க­ளு­டன் ஒற்­று­மைப்­ப­டுத்தி வடக்­கு-­கி­ழக்கை இணைப்­ப­தற்கு இந்த அரசு முயற்சி செய்­கின்­றது. அதற்­கா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தம் தூண்­டப்­ப­டு­கின்­றது என்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது.

இனங்­க­ளி­டையே இவ்­வாறு இன­வா­தத்­தைத் தூண்­டி-­அ­வ­சர காலச் சட்­டத்­தைக் கொண்டு வந்து தேர்­தலை ஒத்­திப்­போ­டு­வ­தற்­கும், வடக்­கு-­கி­ழக்கை இணைப்­ப­தற்­கும், மஹிந்­த­வின் பக்­கம் வந்­து­கொண்­டி­ருக்­கும் முஸ்­லிம்­க­ளைத் தடுப்­ப­தற்­கும் அரசு இவ்­வாறு இன­வா­தத்­தைப் பரப்பி வரு­கின்­றது. இதை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

மக்­கள் இது தொடர்­பில் விழிப்­பாக இருக்­க­வேண்­டும். நாம் இன­வா­தத்தை எதிர்த்­துப் பேசி­வோம்.தேசி­ய­வா­தத்தை ஆத­ரித்­துப் பேசு­வோம்.புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சியை இல்­லா­மல் செய்­யும் திட்­டத்தை எதிர்ப்­போம்.வடக்­கு-­கி­ழக்கு இணைப்பை எதிர்ப்­போம்.இத­னூ­டாக நாம் நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வோம்.-என்­றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-