News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

பொத்துவிலுக்கு இம் முறை மாகாண சபை பிரதிநிதித்துவம்

பொத்துவிலுக்கு இம் முறை மாகாண சபை பிரதிநிதித்துவம் 


குல்ஸான் எபி
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு முதலாவது தேர்தலில் பொத்துவில் மண்ணுக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரை பெற்றுக் கொடுத்தது முஸ்லிம் காங்கிரஸ்தான்.அப் பிரதிநிதித்துவத்தை அடுத்த முறையும் தக்க வைக்க முடியாமல் போனதற்கு எஸ்.எஸ்.பி மஜீத்தான் காரணமே தவிர வேறு யாருமே இல்லை என்பதை பொத்துவில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிக வாக்காளர்களை கொண்ட அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கே மாகாண சபை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லை என்பதையும் இங்கு ஞாபக மூட்ட விரும்புகின்றேன்.

பொத்துவில் பிரதேசம்   தனித்து நின்று எந்த தேர்தலிலும் வெற்றி பெருவதற்கு போதிய வாக்கு  வங்கி கிடையாது.கடந்த கால தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சுமார் எட்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகளே கிதை்துள்ளது.இந்த என்னிக்கையை மேலும் ஐயாயிரம் வாக்குகளால் அதிகரித்தாலும் எந்த ஒரு உறுப்பினரையும் அப் பிரதேசம் பெற முடியாது.

இறுதியாக 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டமாகாண சபை உறுப்பினர் மாஹீர்  சுமார் 19 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற போதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.சுகாதார அமைச்சராகயிருந்த மன்சுர் பாராளுமன்றம் சென்றதால் அவ்   வெற்றிடத்தை இவரால் நிரப்ப முடிந்தது.  

இப்படியான தேர்தல் விதிமுறைகளின்படி எந்த ஒரு கிராமமும் தனித்து நின்று தமது பிரதிநிதிகளை பெற முடியும் என்பது அறிவுரீதியான சிந்தனையல்ல.


 பொத்துவில் மண் இழந்த மாகாண சபை உறுப்புறுமையை மிகவும் இலகுவாக பெறக் கூடிய ஒரு தேர்தல் களமாக எதிர்வரும்   கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமையப் போகின்றது.

இரண்டு  மாகாண சபைத் தேர்தலிலும் கடைப்பிடிக்காத யுக்தியை இம் முறை முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடிக்கவுள்ளது.இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெருவதற்கான வாய்ப்புக்கு அது வழிகோலும்.

முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலில் கடைப்பிடித்தது போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும்.இதில் ஆறு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் அதில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பொத்துவில் தொகுதியிலுள்ள நிந்நவுர்,அட்டாளைச்சேனை இரண்டு தொகுதிக்குள் இருக்கும் ,அக்கரைப்பற்று, மாநகர சபை,அக்கரைப்பற்று பிரதேச சபை,பொத்துவில் அத்தோடு இறக்காமத்தையும் இதில் உள்ளடக்கப்பட்டு மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.இதில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புறுமை   ஒரு பிரதேசத்திற்கு  வழங்கப்படுவதால் அப் பிரதேசத்திற்கு மாகாண சபைக்கான  வேட்பாளரை   நிறுத்த வேண்டிய அவசியமும்  ஏற்படாது.

இப்படியான சூழ்நிலையில் பொத்துவில் பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட மற்றைய இரண்டு வேட்பாளர்களும் இலகுவாக 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெருவர்.

இதே வேளை பொத்துவில் பிரதேசத்திறகான மாகாண சபை வேட்பாளர் யார் என்று தமிழ் லெட்டர் செய்திச் சேவை முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.பாஷித்திடம் கேட்ட போது தான் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் மாகாண சபைக்கு ஹில்டன் றஹீம் பொருத்தமானவர் எனவும் பதிலளித்தார்

















TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-