கட்டாரில் இருந்து வருபவர்கள் டொலரில் பணத்தை கொண்டுவர வேண்டும் -
கட்டார் நாட்டில் இருந்து வரும் பயணிகள் ரியால் பெறுமதி பணத்தை டாலர் அலகில் மாற்றி வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டார் அரபு ஒன்றியத்தில் இருந்து விலக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பண அலகு பல நாடுகளில் பரிமாற்றம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலும் மத்திய வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் பல வணிக வங்கிகள் கட்டார் பண அலகு பரிமாற்றத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில் அங்கிருந்துவரும் இலங்கையர்கள் தமது பணத்தை டாலர் பண அலகில் மாற்றி வருவதன் மூலம் அசௌகரியத்தை தவிர்த்து கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.