அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாசல் ஏற்பாடு செய்த நல்லினக்க இப்தார்
நாட்டில் தற்போது இடம் பெற்று வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் சமூக நல்லின இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்றது.
அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ. உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இஸ்லாம், பௌத்தம்,இந்து,கிரிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது நோன்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் சமூகங்களின் சமாதானம் தொடர்பாகவும் மௌலவி எம்.ஏ. ரகுமத்துல்லா விளக்கமளித்தார்.
அத்தோடு மௌலவி லெத்தீப்,சித்தீக் ஹபீஸ் உட்பட
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.ஏ.எல்.தவம்,டாக்டர் அப்துல் ஜப்பார்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்