ஒருநாள் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த கோஹ்லி!
சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில், ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸி. அணியின் ஜோஸ் ஹஷல்வூட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
விராட் கோஹ்லி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் 3வது இடத்திலிருந்து 2 இடங்கள் முன்னேறி முதலாவது இடத்தை பிடித்துள்ளதுடன், ஹஷல்வூட் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்திலிருந்த வில்லியர்ஸ் 2 இடங்கள் பின்தள்ளி 3வது இடத்தையும், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்த காகிஸோ ரபாடா 3 இடங்கள் பின்தள்ளப்பட்டு 4ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
ஹஷல்வூட் முதலாவது தடவையாக ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.