News Update :

Monday, June 12, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசியல்வாதி.

அட்டாளைச்சேனை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசியல்வாதி.

எஸ்.எச்.சலீம்
தலைமைத்துவ பன்பு இல்லாத  மற்றும் பொது அறிவில்லாதவர்கள் தன்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத அரசியல்வாதிகள்  கோபப்படுவது இயல்பான நடவடிக்கையே.

அப்படியான ஒரு நிகழ்வு அட்டாளைச்சேனை ஊடகவியலாளர் சிலருக்கு ஒரு அரசியல்வாதியால் ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசியல் வாதியின் ஊழல்,முறையற்ற செயற்பாடுகளை  அண்மைக் காலமாக சில தேசிய பத்திரிகை, இணையத்தளங்கள்,மற்றும் முகநுால்களில் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இச் செய்திகள் வெளிவந்த காரணத்தினால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட அரசியல்வாதி இச் செய்திகளை பதிவேற்றம் செய்த அல்லது எழுதிய ஊடகவியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்

தன்னைப்பற்றி ஒரு பிழையாக குற்றம்சாட்டி      செய்தி  வெளியிடப்பட்டிருந்தால்   அதற்கு பொறுப்பான செய்தி ஊடகத்திற்கு எதிராக பல நடவடிக்கைகள்  மேற்கொள்ள முடியும்.அத்தோடு சட்டநடவடிக்கை மேற்கொள்வதோடு பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யலாம்.அதற்கு மேலாக தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க வேண்டும்

இ்படியான பல  வழிமுறைகள் காணப்படுகின்ற போது செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுவதும் அவர்களை தாக்க முற்படுவதும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

ஊடகவியாளர்கள் யாருக்கும் அடிமைப்பட்டு செயற்பட முடியாது.சமூகத்தின் நலன் சார்ந்த விடயங்களுக்கே  அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதே சகல ஊடகவியலாளர்களின் மனநிலை.

அரசியல்வாதி சமூகத்திற்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடும் போது அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஊடகவியலாளருக்கு உண்டு

எனவே பூச்சாண்டி அரசியல் செய்வதை விட்டு விட்டு மக்களுக்கு நண்மை ஏற்படும் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு அந்த அரசியல்வாதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த அரசியல்வாதிக்கெதிராக சம்மந்தப்பட்டவர்களோடு முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம்







TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-