கிழக்கு லண்டனில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனின் Bethnal Green என்ற பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டிடத்தில் இருந்து பாரிய புகை வெளியேறுகின்ற நிலையில், அந்த புகையை சுவாசிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
28 வயதான Rosie Amies என்ற பெண்ணே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 72 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பத்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக கட்டிடத்தின் கூரை வரை பரவியுள்ளது.
எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Sunday, June 25, 2017
லண்டனில் மீண்டும் கட்டிடமொன்றில் தீ விபத்து! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-