முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு?
அஸ்லம் சமட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மனைவியும்,முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் மீண்டும் முஸ்லிம் காங்கிரசில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக அறிய முடிகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பேரியல் அஷ்ரபை இணைப்பதன் மூலம் கட்சியின் செல்வாக்கை இன்னும் அதிகரிப்பதோடு கட்சியை விட்டு பிரிந்த ஆரம்ப கால போராளிகளையும் உள்வாங்கிச் செல்லலாம் என கட்சியின் நலன் விரும்பிகள் நம்புகின்றனர்.
பேரியல் அஷ்ரப்போடு கல்முனையைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
அத்தோடு பெருந் தலைவர் அஷ்ரபின் மகன் அமான் அஷ்ரபும் முஸ்லிம் காங்கிரஸலே இணைவதையே பெரும்பாலும் விரும்புவதாகவும் இருந்தும் தனது தாய் எடுக்கும் நல்ல முடிவை தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் பேரியல் அஷ்ரப் இன்னும் இணைவதற்கான சாதகமான முடிவை அறிவிக்காத போதும் இது தொடர்பாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமுடன் இது தொடர்பாக கேட்ட போது கட்சியை விட்டு பிரிந்த சகலரும் மீண்டும் எந்தவித நிபந்தனையில்லாமல் யாரும் இணையலாம் என கருத்து தெரிவித்தார்.