News Update :

Tuesday, June 20, 2017

TamilLetter

ஞானசாரரை ரவூப் ஹக்கீம் ஒளித்துவைத்துள்ளாரா? பாராளுமன்றத்தில் கேள்வி

ஞானசாரரை ரவூப் ஹக்கீம் ஒளித்துவைத்துள்ளாரா? பாராளுமன்றத்தில் கேள்வி


கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பொது பல சேனாவால் அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அப்போதைய நீதியமைச்சராகவிருந்த ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுக்கவில்லையென சுட்டிக்காட்டிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அப்படியாயின் ஞானசார தேரரை ரவூப் ஹக்கீமா ஒளித்து வைத்துள்ளார் என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர், ஞானசார தேரரை தானே ஒளித்துவைத்துள்ளதாக கடந்த சில நாட்களாக சில முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
அவ்வாறாயின் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நீதியமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம், அப்போதைய வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பொதுபல சேனாவை பாதுகாத்தாரா என கேள்வியெழுப்பினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-