News Update :

Thursday, June 1, 2017

TamilLetter

நாளை திடிரென கூடும் கிழக்கு மாகாண சபை - தவம் தெரிவிப்பு .

 நாளை திடிரென கூடும் கிழக்கு மாகாண சபை - தவம் தெரிவிப்பு
 .
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் உள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மட்ட ஊழியர்கள் சேர்ந்து தமது சொந்த நிதியாக சுமார் 07 மில்லியன் ரூபாவை வழங்குவதற்காகவும், கிழக்கு மாகாண சபையின் நிருவனங்களுடாக அம்மக்களுக்கு மேற்கொள்ளக்கூடிய சேவைகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதற்காகவும், நாளை (02.06.2017, வெள்ளிக்கிழமை) விசேட சபை அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
இன மத வேறுபாடற்று எம்மால் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியினையும், ஒரு சிலர் நேற்று என் காது கேட்க திருகோணமலையில் சபை செயலகத்திலேயே விமர்சித்தனர். மனிதர்களை எப்படித் திருப்திப்படுத்துவது என்ற கேள்வி எப்போதும் உண்டுதான். ஆனால், எல்லாவற்றையும் விமர்சிக்கும் ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்லுவது. இந்த ஈனப்பிறவிகள் சமூக வலைத் தளங்களிலும் இன்று மெலிந்து போய்விட்டனர் என்பது இன்னொரு புறம் கவலையாக இருக்கிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-