கட்டார் அமெரிக்காவிடம 71 போர் விமானங்கள் கொள்வனவு சவுதி அரசு கடும் அதிருப்தி
எப்15 ரகத்தைச் சேர்ந்த 71 போர் விமானங்களைக் கத்தாருக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந் தம் கையெழுத்தாகி உள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை அண்மையில் துண்டித்தது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியபோது, தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை கத்தார் நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தார். இந்நிலையில் ரூ.77,460 கோடி மதிப்பில் எப்15 ரகத்தைச் சேர்ந்த 71 போர் விமானங்களைக் கத்தாருக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே நேற்று முன்தினம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து சவுதி அரேபிய அரசு வட்டாரங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.