News Update :

Friday, June 16, 2017

TamilLetter

தொழுகையின் போது பள்ளியில் குண்டுவெடிப்பு – 6 பேர் பலி

தொழுகையின் போது பள்ளியில் குண்டுவெடிப்பு – 6 பேர் பலி


 இன்று காலை ரமழான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகையின் போது குண்டு வெடித்ததால் 6 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.
காபூலின் தெற்கு பகுதியில் உள்ள அல் சாரா மசூதியில் இந்த தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரமழான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்ற போது அதிகளவிலான மக்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடித்தது. இந்த தாக்குதலையடுத்து சிறப்பு அதிரடிப்படை அல் சாரா பகுதிக்கு விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நஜீப் தனீஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-