லண்டனில் பயங்கரத் தீ! பற்றி எரிகிறது 24 மாடி கட்டடம்! -(VIDEO)
மேற்கு லண்டனிலுள்ள 24 மாடி குடியிருப்பு அடுக்கு வீட்டில் பயங்கர விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை அதிலிருந்து காப்பாற்றும் போராட்டத்தில் 200க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
லாங்காஸ்ட்டர் வெஸ்ட் வீடமைப்பு பகுதியிலுள்ள இந்த அடுக்கு மாடிக் கட்டடத்தை தீ முற்றாகச் சூழ்ந்தது. திகிலூட்டும் வைகையில் பரவிவரும் இந்தத் தீயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் 40க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதிகாலையில் இந்தத் தீவிபத்து நடந்த போது அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் இருந்த மக்களில் பலர் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நிலைமை மோசமடையும் வகையில் உயிர் தப்ப சிலர் மேல் மாடிகளில் இருந்து கீழே குத்திக்கும் கோரத்தையும் காணமுடிந்ததாக இப்பகுதியிலுள்ள மக்கள் கூறினர்.
அண்மைய காலத்தில் நடந்த தீ விபத்துக்களிலேயே மிக மோசமான ஒன்றாக இது அமையும் அபாயம் இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கூறினர். மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட வண்ணம் உள்ளனர். தீயணைப்புப் பணிக்கு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பலர் கட்டடத்தினுள் சிக்கிக் கொண்டுள்ளனர். பயங்கர வெடிச் சத்தங்களுடன் சிதைந்த பொருள்கள் மேல் மாடிகளில் இருந்து கீழே வந்து விழுந்த வண்ணம் உள்ளன. முற்றாக கட்டுக்கு அடங்காத வகையில் தீப் பரவிக்கொண்டிருக்கிறது.