முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று!
இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று சௌத்தெம்டனில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கன் செயற்படவுள்ளதுடன், தென்னாபிரிக்க அணியின் தலைவராக வில்வியர்ஸ் செயற்படுகின்றார்.
தென்னாபிரிக்க அணியை பொருத்தவரையில் டுபிளசிஸ் இருபதுக்கு-20 தொடரிலிருந்து வெளியேறியுள்ளதுடன், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என தோல்வியடைந்திருந்த நிலையில், இருபதுக்கு-20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.