இலங்கையில் 2000 நாய்களின் தலைகள் மீட்பு
அரலங்கவில-தம்பகவுல்பத பகுதியில் உள்ள குப்பை மேடு ஒன்றில் இருந்து 2000 நாய்களின் தலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் குறித்த பகுதியில் நாய் இறைச்சி விற்பனை இடம்பெற்று வருவதாக சந்தேகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரலகங்வில-திமுதுகம பிரதேசவாசிகள், மாதுறுஓய-பொலன்னறுவை வீதியினை மறித்து இன்றைய தினம் ஆரப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்;தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குப்பைகள் திம்புலாகல பிரதேசசபைக்குரிய வாகனங்களால் கொண்டுவந்து போடப்படுவதாகவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சமத்தியுள்ளனர்.