தனுஷின் 'விஐபி 2' டீஸரை வெளியிட்ட அமிதாப் பச்சன்! (VIDEO)
சென்னை: தனுஷின் விஐபி 2 படத்தின் டீஸரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஆனால் டீசர் முழுதும் தனுஷின் காட்சிகள் மட்டுமே வருவதால் கஜோலின் பாத்திரத்திற்கு ஏன் சஸ்பென்ஸ் என ரசிகர்கள் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்படும் என்று தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி டீஸரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். டீஸரில் ஹீரோயினையோ, வில்லி கஜோலையோ காணவில்லை. தனுஷ் மட்டுமே வலம் வருகிறார்.
டீஸரின் தொடக்கத்தில் சமுத்திரக்கனி "ஒருவனுக்கு எதிரி அதிகமாக இருந்தால் அவனைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம்" என கூற தொடங்கி, சண்டைக் காட்சிகளும் சமுத்திரகனியின் வசனம் மட்டுமே இந்த டீஸரில் காட்டப்பட்டுள்ளது.
படத்தில் முக்கிய பாத்திரத்தில் கஜோல் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் நடித்த காட்சிகள் எதனையும் வெளியாக்காமல் படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருப்பது அடுத்த டீஸருக்கான காரணமோ என ரசிகர்கள் வலைத்தளத்தில் கேட்டுள்ளனர்.