அமைச்சர் ஹக்கீம் 16ம் திகதி அட்டாளைச்சேனையில் - தேசியப்பட்டியலுக்கு தயாராகும் பிரமுகர்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் எதிர்வரும் 16ம் திகதி அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.
அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இங்கு வரவுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் போராளிகள் தலைவர் அட்டாளைச்சேனைக்கு வரும் சந்தர்ப்பத்தில் எமது மண்ணிற்குறிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏன் வழங்கவில்லையென கேள்வி கேட்கவுள்ளதாகவும் அதற்கு அவர் என்ன பதில் வழங்கப் போகின்றார் என்பதை நாங்கள் பார்க்கவுள்ளோம் என பதிலளித்தனர்.
இது தொடர்பாக மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கையில் அட்டாளைச்சேனை மக்களை இன்னும் நுாறு ஆண்டுகள் ஏமாற்றினாலும் அவர்கள் நம்பிக்கையுடன் ஏமாறுவார்கள் என கருத்து தெரிவித்தனர்.