12.6 கோடி ரூபாவில் உலகின் விலை குறைந்த ஜெட் விமானம் !
உலகின் மிகச் சிறிய மற்றும் விலை குறைந்த விமானத்தை தயாரித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த ’Cirrus Aircraft’ நிறுவனம்.
தனிநபர்களுக்கு விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘Cirrus vission jet’ எனப்படும் இந்த விமானத்தின் விலை, 12.6 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சந்தைக்கு வந்துள்ள ஜெட் விமானங்களில் இதுவே மிகவும் விலை குறைவான விமானம் ஆகும். இதற்கு முன்பு விற்பனைக்கு வந்த குறைந்த விலை ஜெட் விமானங்களின் பாதி விலையில் ‘Cirrus vission jet’ சந்தைக்கு வருவதால், போட்டி நிறுவங்களுக்கு இது பெரும் சவாலாக விலங்குகிறது.
ஒற்றை என்ஜினுடன் ஒரே பைலட் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தாராளமாக பயனம் செய்யலாம்.
மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ஜெட் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு 3.5 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ஜெட் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு 3.5 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
குறைந்தது 2,000 அடி நீளமுள்ள தரையில் டேக் ஆப் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் 28,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியதாகும்.
இந்த விமானத்தில் பயணிகளின் அனைத்து இருக்கைகளிலும் USB சார்ஜிங் வசதிகள் மற்றும் பொழுபோக்கு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. விமானத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் முழு விமானத்தையும் அப்படியே பத்திரமாக கிழே இறக்கும் வகையில் அதிநவீன பாராசூட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
அனைத்து லைசன்சுகளையும் வாங்கிவிட்டு சந்தைக்கு வர தயாராக உள்ள இந்த விமானத்தை வாங்க இதுவரை 600க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.