விடுதலைப் புலிகளை விட இஸ்லாம் அடிப்படைவாதம் 100 மடங்கு ஆபத்தானது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டியமை, நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக ஞானசார தேரரரை நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் தேரர் நீதிமன்றில் சரணடையாமல் நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகியதை தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான தேரர் இனவாதக் கருத்துக்களை பிரயோகிக்கமாட்டார் என எதிர்பார்த்த போதும் ஊடகங்களுக்கு முன்பாக தற்போதும் இனவாதமாகவே பேசி வருகின்றார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள தேரர்,
முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இலங்கை போன்ற ஒரு நாடு வேறு எங்கும் இல்லை.
ஆனால் இஸ்லாம் அடிப்படைவாதம் விடுதலைப் புலிகளை விட நுறு மடங்கு ஆபத்தானது.
உடனடியாக இஸ்லாம் அடிப்படைவாதத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண முஸ்லிம் மக்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளை பின்பற்றி எமது சட்டத்தையும் கலாசாரத்தையும் சீர்குலைக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளையே எதிர்க்கின்றோம்.
இஸ்லாமியர்கள் எமது பௌத்த மதத்தை விமர்சிக்கின்றனர். ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பில் விமர்சிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
புத்தரின் தர்ம போதனையின் அடிப்படையில் வாழும் என்னை திருட்டில் ஈடுபடும் அடிப்படைவாதி பயங்கரவாதி என்கின்றனர். ஆனால் உண்மைகள் வெளிவரும் போது நான் உயிருடன் இல்லா விட்டாலும் மக்கள் எனக்கு சிலை வைப்பார்கள்.
எனவே தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத் எவ்விதத்தில் வந்தாலும் அதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றார்.
Saturday, June 24, 2017
புலிகளை விட இஸ்லாம் அடிப்படைவாதம் 100 மடங்கு ஆபத்தானது : போராட்டம் தொடரும் என்றார் ஞானசார

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-