டிவி செய்தி வாசிப்பின் போது உள்ளே புகுந்த நாய்! 'VIDEO'
ரஷ்யாவில் செய்தியாளர் ஒருவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாய் திடீரென்று உள்ள புகுந்த சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைதளங்களில் புயல் வேகத்தில் பரவி வருகிறது
ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று அங்கு நாயின் குரல் ஒலித்தது.
Video- நன்றி: MTPK
பின்பக்கமாக வந்து மேஜையில் ஏற முயன்ற அந்த 'லேப்ரடார்' வகை நாயை பெரிதுபடுத்தாமல், செய்தியாளர் தமது வேலையைத் தொடர முயன்றாலும், தொலைக்காட்சியில் தோன்ற விரும்பிய அந்த நாயை தடுக்க முடியாமல் கிட்டத்தட்ட 15 விநாடிகளுக்கு தடுமாறினார்.
பின்பு செய்தியாளர் அதைச் சமாளித்த நிகழ்வை அந்த தொலைக்காட்சியின் யூ-டியுப் பக்கத்தில் பதிவேற்ற, இதுவரை 30 லட்சம் பேர் அந்தக் காணொளியைப் பார்த்துள்ளனர். மேலும் அந்தச் செய்தியாளர் தனக்கு நாயைவிடப் பூனையைத் தான் அதிகம் பிடிக்கும் எனக் கூறியிருந்தார்.