சிறுமியை கவ்வி நீருக்குள் இழுத்துச் சென்ற கடல்சிங்கம்! - அதிர்ச்சி! -VIDEO
கனடாவின் வான்கூவர் நகரிலுள்ள மீன்பிடி துறை ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடல் சிங்கம் ஒன்று திடீரெனப் பாய்ந்து கவ்வி, தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை நீருக்குள் கடல் சிங்கம் இழுத்துச் செல்லும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
## வீடியோ: நன்றி -
வான்கூவர் மீன் துறையில் கடல் சிங்கம் ஒன்று நீந்தித் திரிந்து கொண்டிருந்தது. அங்கு பலர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அதற்கு உணவுகளையும் தந்து கொண்டிருந்தனர்.
அப்போது மீன்பிடித் துறையின் விளிம்பில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை பின்புறமிருந்து அவரது உடையைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துத் சென்றது.
திடீரென நடந்த இந்தச் சம்பவத்தினால் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். எனினும், அங்கிருந்த ஒருவர் தண்ணீருக்குள் பாய்ந்து அந்தச் சிறுமியை கடல் சிங்கத்திடமிருந்து காப்பாற்றினார். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்தச் சிறுமி காயமடையவில்லை.
இந்தக் காட்சியை வீடியோவில் பதிவு செய்திருந்த ஒருவர், அதனை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார். ஏராளமான மக்கள் இதனை பார்த்துள்ளனர்.
இது பற்றிக் கருத்துரைத்த கடல் வாழ் பாலூட்டி இனங்களின் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அண்ட்ரூ டிரிட்டெஸ், இது அந்த கடல்சிங்கத்தின் தவறு அல்ல என்று சுட்டிக்காட்டினார்.
கடல்சிங்கத்திற்கு பலர் உணவு அளித்துள்ளனர். அது ஆர்வத்துடன் உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், கரையை ஒட்டிய சுவரின் விளம்பில் அமர்ந்து அந்தச் சிறுமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது சிறுமியின் ஆடையை, ஏதோ உணவுப் பொருள் என நினைத்து அது கவ்வியுள்ளது என்பது காணொளியில் காண முடிகிறது என்று அண்ட்ரூ சொன்னார்.