News Update :

Tuesday, May 9, 2017

TamilLetter

நடுவருக்கே நடுவர் காட்டினார் 'ரெட் கார்டு' பார்க்கிறீங்களா..., பாருங்க.. (video)




தவறு செய்கிற கால்பந்து வீரர்களுக்கு சிவப்பு  எச்சரிக்கை அட்டையைக் காட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்றிய நடுவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், சக நடுவருக்கே சிவப்பு அட்டையைக் காட்டி வெளியேற்றிய நடுவரைப் பார்த்திருக்கிறீர்களா?

ஸ்காட்லாந்தில் பிரிமியர் லீக கால்பந்து போட்டியின் போது இப்படியொரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது. கில்மானோக் குழுவுக்கும் டாண்டி குழுவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது லைன்ஸ் மென்னாக பணிபுரிந்த துணை நடுவர் அண்ட்ரூ வில்லியத்திற்கு நடுவர்கிரெய்க் தோம்சன் சிவப்பு எச்சரிக்கை அட்டையைக் காட்டி வெளியேற்றி போது ரசிகர்கள் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
முற்பகுதி ஆட்டம் முடிய நில நிமிடங்கள் இருந்த போது கிமானோக் குழுவுக்கு கிடைத்த 'கார்னர் கிக்கை'' எடுக்க அக்குழுவின் ஆட்டக்காரர் ஜோர்டன் ஜோன்ஸ் தயாராக இருந்த வேளையில், ஆட்டத்தை நிறுத்தி விட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து துணை நடுவர் அண்ட்ரூ நகர்ந்தார்.
## வீடியோ: நன்றி -SPFL
என்ன நடந்தது எனக் கண்டறிய முனைந்த போது அண்ட்ரூ முகத்தை திருப்பிக் கொண்டு சற்று தொலைவாகப் போய் குமுட்டினார்.  இதனிடையே இந்தச் சம்பவத்தை நடுவர் கிரெய்க் தோம்சன் அருவருப்பான ஒன்றாகக் கருதி இருக்கவேண்டும். சில வினாடிகள் ஆலோசித்து விட்டு துணை நடுவர் அண்ட்ரூவை நோக்கி முன்னேறிய நடுவர் தோம்சன், சிவப்பு எச்சரிக்கை அட்டையை எடுத்துக் காட்டி வெளியேற்றினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-