News Update :

Monday, May 8, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கலந்து கொள்ளாத அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்





கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கலந்து கொள்ளாத அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

முகம்மட் தம்பி
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(9) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் சுகாதார பிரதியமைச்சருமான பைஸல் காசீம“ தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான   ஏ.எல்.தவம்,எம்.எஸ்.உதுமாலெப்பை,ஐ.எல்.மாஹீர் உட்பட   பிரதேச செயலாளர் அதிசயராஜ்  மற்றும் . திணைக்களத் தலைவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 2017ம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்டு சபையினால் அனுமதியும் வழங்கப்பட்டன.

இதே வேளை அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் வெளிநாடு சென்றுள்ளதால்  இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-