News Update :

Friday, May 19, 2017

TamilLetter

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் இன்று மாகாண சபை உறுப்பினர் தவத்தோடு பேச்சுவார்த்தை


இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் இன்று மாகாண சபை உறுப்பினர் தவத்தோடு பேச்சுவார்த்தை

இலங்கை தேசிய   உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் இலங்கை உதைப்பந்தாட்ட தற்போதைய தலைவருமான அனுர டீ,சில்வா தலைமையிலான குழுவினர்   கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஏ.எல்.தவத்தோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இப் பேச்சுவார்த்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் அக்கரைப்பற்று இல்லத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இடம் பெற்றது.

இலங்கையின் உதைப்பந்தாட்டத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வருகை தந்த குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

அத்தோடு அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசத்தின் உதைப்பந்தாட்டத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் அதனை முன்னேற்றுவது  தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இலங்கை தேசிய அணிக்கு அக்கரைப்பற்று பிராந்தியத்திலிருந்து வீரா்களை தெரிவு செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கொழும்பு றினோ உதைப்பந்தாட்ட அணியின் பிரதிநிதி,கொழும்பு  சிற்றி அணித் தலைவர்,தேசிய உதைப்பந்தாட்ட தொழிநுட்ப முகாமையாளர்,அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் உப தலைவர்.எம்.பி செய்னுலாப்தீன்,லீக்கின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் அன்வர் நௌஷாத்,லீக்கின் முகாமையாளர் ஏ.எல்.றமீஸ் ஆகியோர் இப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-