News Update :

Friday, May 5, 2017

TamilLetter

பெரும் சோகம்! உலகை கலங்க வைத்துள்ள படம்


ஆப்கானிஸ்தானில் தன்னுடைய உயிரை பறிந்த மோட்டார் குண்டுவெடிப்பை அமெரிக்காவை சேர்ந்த இராணுவ புகைப்படக்கலைஞர் படம் பிடித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தில் போர் தொடர்பான புகைப்படங்களை எடுக்கும் பிரிவில் இருந்தவர் பெண்புகைப்படக்கலைஞர் ஹில்டா கிளைடோன் (வயது 22).
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் இராணுவப்படைகள் பயிற்சியின் போது மோட்டார் குண்டுவெடிப்பில் ஹில்டா உயிரிழந்தார். அவர் தான் உயிரிழந்த குண்டுவெடிப்பையும் தன்னுடைய கெமராவில் புகைப்படம் எடுத்து உள்ளார். இப்போது அதனை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானின் லாக்மான் மாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 2-ம் திகதி பயிற்சி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் சிறப்பு புகைப்பட கலைஞராக பணியாற்றிய ஹில்டா உயிரிழந்தார்.
மோட்டார் குண்டு வெடிப்பில் 4 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சம்பவங்கள் அனைத்தையும் அவர் தன்னுடைய போட்டோவில் புகைப்படமாக எடுத்து உள்ளார்.
ஹில்டா உயிரிழப்பானது ராணுவத்தில் பயிற்சி மற்றும் போரின் போது ராணுவ வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளும் எப்படி அபாயகரமான சூழல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என அமெரிக்கவின் ராணுவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-