News Update :

Thursday, May 18, 2017

TamilLetter

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-பாயீஷா ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு


அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-பாயீஷா ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு

பர்வீஸ் ஆதம்லெப்பை அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மகா வித்தியாலத்தின் கல்வி சீர்கெட்டு போய்யுள்ளதாக பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த இப் பாடசாலை பல கல்விமான்களையும் தலைவர்களையும் உறுவாக்கிய போதும் அண்மைக் காலமாக அதன் வளர்ச்சி கேள்விக்குட்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

600 மாணவர்கள் இங்கு கல்வி கற்பதுடன்   35 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.இதில் அதிகளவு ஆசிரயர்கள் 10 வருடங்களுக்கு மேலாக இதே பாடசாலையில் கல்வி கற்பித்து வருகின்றனர்.

நீண்ட காலமாக ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக ஒரு ஆசிரியர் கடமைாற்றி வருவதனால் பல மோசடியான சம்பவங்கள் இடம் பெருவதற்கு அதிகமான வாய்ப்புகள்   காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்..

அந்த வகையில் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் பாட வேளையில் தொலைபேசி, முகநுால்கள் மற்றும் இணைய தளங்களில்  தமது நேரத்தை அதிகம் கழிப்பதை   காணக் கூடியதாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாடசாலையின் கல்வி சார ஊழியர்கள் விரும்பியவாறு பாடசாலைக்கு வருவதாகவும் இதற்கு பரிகாரமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அன்பளிப்புகள் பணியாளர்களினால் வழங்கப்படுவதாகவும் ஒருத்தர் தெரிவித்தார்.

 நீண்ட காலமாக  இப்படியாக  செயற்படும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக் கோரி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிட்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பாடசாலையில் வருடங்களை கழித்த ஆசிரயர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்து அதற்கு பதிலாக புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுமென பொது மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-