News Update :

Friday, May 26, 2017

TamilLetter

ஞானசார தேரர் க்கு பதிலாக வேறு ஒரு தேரா் அடாவடி

 ஞானசார தேரர் க்கு பதிலாக வேறு ஒரு தேரா் அடாவடி
சில காலம் பாரிய இனவாத பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன தேரர் அமைதியாக இருந்துந்ததை காணக்கூடியதாக இருந்தது.
எனினும் தனது ஆட்டத்தை நேற்றைய தினம் அம்பிட்டிய சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆரம்பித்தார்.குறித்த தேரர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை தாக்குவதற்கும் முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்குவதாகவும் மிரட்டலை விடுத்துள்ளார்.
சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை காலமும் அமைதியாக இருந்த மட்டக்களப்பு தேரர், ஞானசார தேரர் தலைமறைவான நிலையில் அவருக்குப்பதிலாக தனது ஆட்டத்தினை மீண்டும் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-