News Update :

Tuesday, May 23, 2017

TamilLetter

அசாமின் போர் விமானம் மாயம்! கடத்தப்பட்டதா?

அசாமின் போர் விமானம் மாயம்! கடத்தப்பட்டதா?



அசாம் வானவெளியில் பறந்து கொண்டிருந்தபோது போர் விமானம் ஒன்று தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா என இராணுவம் விசாரித்து வருகிறது.
அசாமின் தேஸ்பூரில் வடக்கு பகுதியில் சென்றபோது சுகோய் 30 ரக விமானம் ரேடாரிலிருந்து மறைந்ததாக கூறப்படுகிறது. மாயமான விமானத்தில் இரு போர் வீரர்கள் இருந்ததாகவும் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், விமானத்தை தீவிரவாதிகள் கடத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
போர் விமானம் காணாமல் போனது ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-