17 வருடங்களின் பின் அதாஉல்லா ஹஸனலி அணியுடன் இணைவு - மாகாண சபையில் இணைந்து போட்டி
குல்ஸான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் செயலாளர் நாயகமும் பிரதியமைச்சருமான எம்.ரி.ஹஸனலியோடு இணைந்து செயற்படுவதற்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சகல தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளதாக ஹஸனலி தரப்பினரால் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு நடைபெற உத்தேசித்துள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எம்.ரி.ஹஸனலியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையை தேசிய காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஹஸனலி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவான ஒரு சின்னத்தில் போட்டியிடுவது அல்லது தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் சந்தர்ப்பத்தில் ஒரு கட்சியில் இரண்டு வேட்ளைபாளர்களை நிறுத்துவது என ஆராயப்பட்டு வருகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இரண்டு வலையமாக பிரிக்கப்பட்டு மூன்று மூன்று வேட்பளர்களை போட்டியிட வைப்பதற்கான யுக்திகளை இப் போதிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு வேட்பாளர் தெரிவும் இடம்பெற்று வருகின்றது.