News Update :

Tuesday, May 30, 2017

TamilLetter

முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவுத்திற்கு தவம் மரண அடி

முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவுத்திற்கு தவம் மரண அடி

விலங்கிடப்படாத வழிகேடு.............................
பிணங்களின் வாடையில்
புனிதமிக்க நாட்களில்
நீதான் வருவாய்
வேறு யாராக இருக்க முடியும்?
விலங்கிடப்படாத வழி கேடு
வேறு யாராக இருக்க முடியும்?
ஆன்மா உருகி
ஆயுள் நனைய அழுது
சிரசு தாழும் கணங்களில்
நாற்றமெடுக்கும் இறைச்சித் துண்டுகளை
பல்லிடுக்கில் புசிக்க
உன்னைத் தவிர
வேறு யார்தான் இருக்கிறார்?
மரணக்குழியின் நெருப்புக்கங்கை
தானாக நெய்யூற்றிச் சூடமேற்ற
 உன்னையன்றி வேறு யார்தான் இருக்கிறார்?
உன் மரணப் படுக்கையைக் காண
நாம் வருவோம்
உன் நாவின் உளறலை
அருகிருந்து கேட்போம்
அப்போதும் நீ
அதையே அங்கலாய்ப்பாய்
இழுத்துக் கொள்ளும் நாவின் வழியேயும்
நீ அதையே ஆராதிப்பாய்
உனக்கான பதவி
(மட்டக்களப்பு மாவித்துவானுக்குச் சமர்ப்பணம்)
A.L.THAVAM
30.05.2017

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-