News Update :

Thursday, May 4, 2017

TamilLetter

அமெரிக்காவுக்கு எதிராக சீனா!


தென்கொரியாவில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு சாதனத்தை உடனடியாக நீக்க வேண்டும், என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா ஏவுகணைகளை வீசினால் அதை நடுவானில் தடுத்து நிறுத்தி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஹுனாங் கூறியதாவது:
‘தாட்’ ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென் கொரியாவில் அமெரிக்கா நிறுவியுள்ளது. இதை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் சீனா தற்காப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.’தாட்’ ஏவுகணை தடுப்பு சாதனத்துக்கு ரஷ்யாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-