அரசாங்கத்தை அச்சுறுத்தும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம். இன்றளவில் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமைக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாதாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் குழுவின் செயற்பாடுகளே காரணமாகும்.
கூட்டு அரசாங்கமாகச் செயற்பட வேண்டுமானால் இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரத் திட்டங்களினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்” என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.