News Update :

Tuesday, May 23, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர் தவத்தை அதாஉல்லாவால் தோற்கடிக்க முடியுமா?

மாகாண சபை உறுப்பினர் தவத்தை அதாஉல்லாவால் தோற்கடிக்க முடியுமா?

நுாறுல் ஹக்
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனி மனிதனை அலங்கரிக்கும் கட்சியல்ல. இது ஒட்டு மொத்த  முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரல்.இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தேசிய சர்வதேச ரீதியாக அனுகி சிக்கல்களை இலகுவாகவும் சில நேரங்களில் கடினமாகவும் தீர்க்கப்பட்டு வருவது இதன் தலைமைத்துவத்தின் நன்மதிப்பின் காரணமாகவே.

இந்த இயககத்தின் தலைமை ஒரு குரலை உயர்த்தினால் உலக நாட்டு துாதுவர்கள் ஹக்கிமின் வீடு தேடி செல்லும் அளவிற்கு நுன்னறிவுள்ள ஒர் தலைமையின் ஆளுமையின் வெளிப்பாடாகவே மற்ற சமூகங்களால் பார்க்கப்படுகின்றது.

தலைவரால் வளர்த்தெடுக்கப்படும்   தளபதியாக முஸ்லிம் சமூகம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களை அடையாளம் கண்டு வருகின்றது.

அறிவும் போராட்ட குணமும் நிறைந்த தவத்தை அழிப்பதன் மூலமே  தாம் வெற்றியடையலாம் என மக்களால் தோற்கடிக்கப்பட்ட கலாவதியான அரசியல்வாதிகள் மனக் கணக்கு போட்டுள்ளனர்.

தலைமைக்கு விசுவாசம் எனும் தாரக மந்திரத்தோடு தவம் தடைகள் தாண்டி  பயனிக்கும் போது  எதிரிகளின் கூடாரங்கள் சுக்குநுாறாகிப் போகின்றது.

கருத்துக்களால் கருத்துக்களை அறுக்கத் தெரிந்த தவம் மறுமுனையில் களத்தில்  போராட்ட வீரனாக மாறும் சந்தர்ப்பங்கள் எதிரியை புற முதுகு காட்ட வைக்கின்றது.

தலைமைக்கு எதிரான  வசைகளையும் குற்றச்சாட்டுக்களையும் ஹஸனலி மற்றும் பஸீர் சேகு தாவுத் ஆகியோர் மக்கள் மனங்களில் விதையாக விதைக்க முற்பட்ட போது தவம்  வைரசாக உறுமாறியது அவர்கள் எதிர் பார்க்காதது ஒன்றுதான்.

இன்று தலைமைகை்கு முன்பு தவத்தை அழிப்பதன் மூலமே அதாஉல்லாவினதும்,ஹஸனலியினதும்,பஷிரினதும் எதிர்காலம் தங்கியுள்ளது.அதற்காக தலைமைக்கு பதிலாக தவத்த்தை அழிப்பதற்கான  நிகழ்ச்சி நிரலுக்கு தம்மை தயார்படுத்தி   வருகிறது உடைந்து போன கூட்டம்.

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு நன்கு தெரியும் தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமில்லாத எவரையுமே துாக்கியெறிந்து விடுவார்கள் என்பது வரலாறு.இன்று முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்களின் கனவாக மாறியுள்ளார் தவம் இதை இன்னும் அவர்கள் புரியவில்லை அடுத்த தேர்தலில்  அதாஉல்லா கூட்டணியின் மூச்சை நிறுத்தும் இந்த மரத்தின் இளைஞர் படையணி







TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-