News Update :

Monday, May 8, 2017

TamilLetter

பைஸல் காசீம் தலைமையில் பல தீர்மானங்களை நிறைவேற்றிய அக்கரைப்பற்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.





பைஸல் காசீம் தலைமையில் பல தீர்மானங்களை நிறைவேற்றிய அக்கரைப்பற்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (08) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர் பிரதியமைச்சர் பைஸல் காசீம் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது 2017ம் நடப்பாண்டுக்குறிய  பல புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் 28 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்,கொங்கிரீட்  வீதிகள் அமைத்தல்,இரண்டு பாடசாலைகளை புனரமைப்பு செய்தல்,சுகாதார கிளினிக் சென்றரை நிர்மாணித்தலும் இயங்க வைத்தல்,வடிகான்களை புனரமைப்பு மற்றும் துப்பரவு செய்தல்,என்பன முன்மொழியப்பட்டு அனுமதி வழங்கப்பட்டன.

மேலும் விளையாட்டு பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பொது விளையாட்டு மைதானத்தில் பாத்திருப்பு மண்டபம் அமைத்தல் எனபன உள்ளடக்கப்பட்டன.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்.எம்.எஸ்.உதுமாலெப்பை,மாஹீர்,, பிரதேச செயலாளர் எம்.ஏ.லெத்திப்,உட்பட  திணைக்களத் தலைவர்கள் பிரதேச ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-