இன்று அமைச்சர் ரிஷாட் கலந்து கொண்ட கூட்டத்தில் ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய சம்பவம்
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமானது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன்போது அங்கு செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவரின் 'நெஞ்சைப் பிடித்து தள்ளி அவரை கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார். அதன்போது அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட செயலக அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.