கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கவிஞர் ஏ.எல்.தவம் ஜப்பான் நாட்டிலிருந்து ஏழுதிய கவிதை இணையத்தில் வைரலாக
மங்கோலியர் தேசத்தில்.........
ஒவ்வொன்றாய்த் தேடி
என்னைக் காண்கிறேன்
என்னைக் காண்கிறேன்
சிலது மாறியும்;
மாறாமலும்;
என்னைக் காண்கிறேன்
மாறாமலும்;
என்னைக் காண்கிறேன்
நாளங்களை உறுஞ்சி
இளமையைக் குடித்த
இயந்திரங்களின் நடுவில்
இளமையைக் குடித்த
இயந்திரங்களின் நடுவில்
மாதம் நீட்டிய உறையில்
மறந்து போன
மறந்து போன
நலிந்த தோலும்;
வறண்ட தொண்டையினதும்
வாடையை உணர்கிறேன்
வறண்ட தொண்டையினதும்
வாடையை உணர்கிறேன்
எச்சங்களாய் ;
ஆடம்பரமும்
மேற்தட்டு உறவுகளுமே
எஞ்சியிருப்பதை உணர்கிறேன்
ஆடம்பரமும்
மேற்தட்டு உறவுகளுமே
எஞ்சியிருப்பதை உணர்கிறேன்
மங்கோலிய மனிதக் காட்டில்
நினைவுச் சின்னமாகிப் போன
என் வாழ்விடத்தின் கதையை
வாசிக்கிறேன்
நினைவுச் சின்னமாகிப் போன
என் வாழ்விடத்தின் கதையை
வாசிக்கிறேன்
இதோ! அந்த இரும்பு ஆலை
"தவம்"களை உறுஞ்சுகிறது
இன்னும் என் வியர்வையும் மணக்கிறது
"தவம்"களை உறுஞ்சுகிறது
இன்னும் என் வியர்வையும் மணக்கிறது
பனியில் உருகிய
என் பருவ ஆசைகளே!
நீங்கள் புதைக்கப்பட்ட மண்ணை
ஒரு முறை பாருங்கள்
என் பருவ ஆசைகளே!
நீங்கள் புதைக்கப்பட்ட மண்ணை
ஒரு முறை பாருங்கள்
உங்கள் கல்லறைக்கு
இருபது வருடங்கள் ஆயிற்று
இருபது வருடங்கள் ஆயிற்று
ஓ...."ஷக்கூரா" மலர்களே
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
நானும்தான்
உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
நானும்தான்
மீண்டும் துளிர்ப்பதற்காக
(ஜப்பானில் மீண்டும் கால் வைக்கக் கிடைத்ததை எண்ணி அங்கிருந்து தற்போது எழுதியது)