News Update :

Friday, May 19, 2017

TamilLetter

அதாஉல்லாவுக்கு சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பதிலடி


அதாஉல்லாவுக்கு  சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பதிலடி

பாலமுனையில் நாளை நடைபெறயிருக்கும் மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொள்வதாக தமிழ் லெட்டர் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இச் செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் இன்று மாலை எமது தமிழ் லெட்டர்  செய்திப் பணிப்பாளருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாலமுனையில் நடைபெரும் கிரிக்கட் இறுதிப் போட்டியில்   தான் கலந்து  கொள்வது தொடர்பாக எந்த    சம்மதத்தையும் நான் யாருக்கும் தெரிவிக்கவில்லை    எனக்  கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் நானும் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதென்பது முடியாத காரியம்.முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராகவும் சமூகத்திற்கு எதிராகவும்  பிரச்சாரம் செய்யும் அதாஉல்லாவோடு  ஒரு போதும் நான் இணைந்து ஒரே நிகழ்வில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்  .

அத்தோடு முஸ்லிம் காங்கிரசின் கட்சிப் போராளிகள் நான் இருக்கும் மேடையில் அதாஉல்லா அமர்ந்திருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.கட்சிப் போராளிகளின் எதிர்பார்ப்பை நான் தட்டிக் கழிக்க முடியாது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-